சில வருடங்களுக்கு முன்பு, ஓர் அரசியல் கட்சிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, அந்தக் கட்சியின் செயலாளர் கடத்தப்பட்டிருந்தார்.
இவ்வாறு கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான, அரசியல் ரீதியாக தொடர்புடைய ஒரு முக்கிய தேரர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள.
இந்த விவகாரம் தொடர்பில் நீண்ட விசாரணைகளின் பின்னர், குற்றம் சாட்டப்பட்ட துறவி மற்றும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.