சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானின் பிரதான உதவியாளர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) டுபாயில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்  வைப்பட்டுள்ள ஹெரோயின் வர்த்தகதரான கஞ்சிபான இம்ரானின் பிரதான உதவியாளர் ஒருவர் வெள்ளம்பிட்டி – கொலன்னாவ – சாலமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த  நவ்பர் மொஹமட் அலி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 10 கிராம் 480 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அவர் இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

Related posts

அலோசியஸ் மற்றும் கசுனுக்கு 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

8 ஆவது நாளாகவும் வேலை நிறுத்தம்

நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு