உள்நாடுபிராந்தியம்

கஞ்சா செடிகளை வளர்த்த மூவர் கைது

லுணுகம் வெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுகேவெவ பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில், 3 காணிகளில் கஞ்சா செடிகளை வளர்த்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, 15, 914 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தனமல்வில பகுதியினைச் சேர்ந்த 30,31 மற்றும் 34 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்

editor

கண்டி எசல பெரஹரா திருவிழா இன்றுடன் நிறைவு

கொவிட் – 19 தொடர்பில் மக்கள் முறைப்பாடுகளுக்கு புதிய இலக்கம் அறிமுகம்