சூடான செய்திகள் 1

‘கஜா’ புயல் காரணமாக யாழ் குடாநாட்டில் நாளை கடும் மழை!

(UTV|COLOMBO)-‘கஜா’ புயலின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் குடாநாட்டில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

தற்போதைய நிலையில் , காங்கேசன்துறையில் இருந்து சுமார் 660 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் கஜா புயல் நிலைக்கொண்டுள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் காரணமாக நாளை பிற்பகல் தொடக்கம் வடமாகாணத்தின் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

கஞ்சிபான இம்ரான் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலை

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தல்

4 இலங்கையர்களும் விடுதலை