உள்நாடு

கச்சா எண்ணெய் கப்பலுக்கு கொடுக்க டாலர்கள் இல்லை

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள கச்சா எண்ணெய் கப்பலுக்கு இதுவரை பணம் செலுத்த முடியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 10ஆம் திகதி இலங்கை வந்த இந்தக் கப்பலில் இருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

அதன்படி கப்பல் இலங்கைக்கு வந்து 32 நாட்கள் ஆகிறது.

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எக்ஸ்டோ எனப்படும் இந்த கச்சா எண்ணெய் அதிக டீசல் மற்றும் பெட்ரோலை உற்பத்தி செய்ய முடியும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கையை வந்தடைந்த 36,000 மெட்ரிக் தொன் பெற்றோல் கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டதையடுத்து, அதன் சரக்குகளை இறக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

அமரர் தொண்டமானின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மஹிந்த வசம்

மேலும் 4 பேர் பூரண குணமடைந்தனர்

சமூர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கும் திகதி அறிவிப்பு