வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலயே மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
புலி பாய்ந்தகல் களப்பை அண்டிய பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்திலேயே திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது
இதன்போது சந்தேக நபர்கள் உபகரணங்களை கை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கசிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டதுடன் அவை யாவும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் ஆலோசனையில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத்தர் தலைமையிலான சார்ஜன்ட்களான ருவான், வீரசிங்க, சஞ்சீவ மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் அக்ரம் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்