உள்நாடு

கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொல்கத்தா) –   முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவித்துள்ளன. நேற்று இரவு அவருக்கு கொரோன பாசிட்டிவ் என்று ரிப்போர்ட் வந்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது வைரஸ் லோடு 19.5 என்று சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஜனவரி 2021-ல் கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு இவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சில நாட்களில் உடல் நிலை ஸ்திரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புகைபிடிப்பவர்களுக்கான அறிவித்தல்

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நன்கொடை

2024 ஆம் ஆண்டில் புதிய விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கான திட்டங்கள் – ரோஹன திசாநாயக்க.