வகைப்படுத்தப்படாத

ஓரினச் சேர்க்கையாளராக இருந்தேன் – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

(UTV|PHILLIPINES) பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ துதர்தே ஓரினச் சேர்க்கையாளராக இருந்து குணமடைந்தேன் என  பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவர் பொது நிகழ்ச்சிகளில் பேசுகிற போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதும், இதனால் பல தரப்பினரின் கண்டனங்களுக்கு உள்ளாவதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், தற்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டி உள்ளார். அண்மையில் ஜப்பானுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த ரோட்ரிகோ துதர்தே, அங்கு வாழும் பிலிப்பைன்ஸ் மக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இப்போது அவர், பிலிப்பைன்சின் முக்கிய எதிர்க்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அண்டோனியோ டிரில்லேன்ஸ் என்பவரை அவமதிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர் உரையாற்றுகையில்;

“… நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். அண்டோனியோ டிரில்லேன்ஸ் குறித்து என்ன நினைக்கிறீர்கள். அவர் ஒரு ஓரின சேர்க்கையாளர். சொல்லப்போனால் நானும் ஓரின சேர்க்கையாளராக இருந்து இருக்கிறேன். ஆனால் இதில் நல்ல விஷயம் என்னவென்றால் நான் என்னை குணப்படுத்திக்கொண்டேன். நான் ஓரின சேர்க்கையாளராக இல்லை…” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

ලාංකිකයන්ට උල්කාපාත වර්ෂාවක් දැකගැනීමේ අවස්ථාවක්

ஐஸ் ஹாக்கி வீரர்கள் பலி-அஞ்சலி நிகழ்ச்சியில் ஜஸ்டின் ட்ருடாவ்

Iran nuclear deal: Enriched uranium limit breached, IAEA confirms