வகைப்படுத்தப்படாத

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு புதிய சட்டம் அறிமுகம்?

புரூனேவில் எதிர்வரும் வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய சட்டங்களின்படி ஓரினச்சேர்க்கையாளர்களும் பாலியல் குற்றம் புரிவோரும் கல்லால் அடித்தோ, சாட்டையால் அடித்தோ கொல்லப்படுவார்கள் என மனித உரிமைகள் அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.

ஏற்கனவே இருக்கும் இஸ்லாமிய மதச் சட்டங்களின்படி ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை நடைமுறையில் இருக்கிறது.

ஆனால் அடுத்த மாத துவக்கத்திலிருந்து அறிமுகமாகும் புதிய சட்டங்களின்படி, ஓரினச்சேர்க்கையாளர்களும் பாலியல் குற்றம் புரிவோரும் கல்லால் அடித்தோ, சாட்டையால் அடித்தோ கொல்லப்படலாம்.

அத்துடன் முதல் முறை திருடுபவர்களின் வலது கை வெட்டப்படுவதோடு, மீண்டும் அவர்கள் அதே குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களது இடது கால் பாதம் வெட்டப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த புதிய சட்டங்கள் சிறுவர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல மனித உரிமைகள் அமைப்பான Amnesty International, இந்த சட்டங்கள் குரூரமானவை என கடுமையாக விமர்சித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

யுக்ரேனிய கடற்படை கப்பல் மீது ரஷ்யா தாக்குதல்

“கட்டார் செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு” புதிய தடை

Rami Malek: Bond terrorist ‘not driven by religion’