உள்நாடு

ஓய்வூதிய கொடுப்பனவு நாளை முதல் வழங்க நடவடிக்கை

(UTV|கொழும்பு) – மே மாதத்துக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகளை நாளை(05) மற்றும் நாளை மறுதினமும்(06) வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அனைத்து ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்குமான ஓய்வூதிய கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், வெசாக் போயா தினம் மற்றும் வார இறுதி விடுமுறை ஆகியன எதிர்வரும் நாட்களில் காணப்படுவதன் காரணமாக மே மாதத்துக்கான ஓய்வூதியக் கொடுப்பனவை முன்கூட்டியே வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் மாத ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் வழங்கிய சலுகைகள் இந்த மாதமும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 82 பேர் கைது

குளிர்பானத்தை குடித்த மகளும் தந்தையும் வைத்தியசாலையில்

editor

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகாரம்