தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார்.
34 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2025 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதியுடன் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
தனது கடமையின் போது உதவிய முன்னாள் அமைச்சர்கள், அரசாங்க ஊழியர்கள், அமைச்சர்கள், பிரதம அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நன்றியை தெரிவித்துள்ளார்.
