அரசியல்உள்நாடு

ஓய்வுபெற்ற ஆசிரியர் அதிபர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகபட்ச ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவேன் – சஜித் பிரேமதாச

பி.சி. பெரேரா சம்பள ஆணைக்குழு மூலம் செயல்படுத்தப்பட்ட சம்பள அதிகரிப்பு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கிடைக்காமையால் சுமார் 85,000 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலருக்கு 40,000 ரூபா ஓய்வூதியம் பெறும் வேளை, மற்றும் சிலர் சுமார் 120,000 ரூபா ஓய்வூதியம் பெறுகின்றனர்.

இந்த பாரதூரமான அநீதிக்கு எதிராக தானும் ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB), ஐக்கிய மக்கள் கூட்டணியும் எடுக்க முடியுமான உட்சபட்ச நடவடிக்கைகளை எடுத்து, நீதியை நிலைநாட்டுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தேசிய அமைப்பினரால் இன்று (07) தியத்த பொல்துவ சந்தியில் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட இடத்திற்குச் சென்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் தலைமை தாங்குவோம்.

இது தொடர்பான முன்மொழிவுகளை இந்த இம்முறை வரவுசெலவுத் திட்ட விவாதத்திலும், குழு நிலை விவாதத்தின் போதும் முன்வைப்பேன்.

தேவைப்பட்டால் இலவச சட்ட உதவிகளையும் பெற்றுத் தருவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

எம்பிலிபிட்டி பொது வைத்தியசாலையை தரமுயர்வு

தரம் 5 – பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியானது

பேருந்துடன் லொறி மோதி விபத்து – மூன்று பேர் காயம்

editor