உள்நாடு

ஓமானிலிருந்து நாடு திரும்பிய 288 இலங்கையர்கள்

(UTV|கொழும்பு)- ஓமானில் சிக்கியிருந்த 288 இலங்கையர்கள் இன்று(29) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவையின் விசேட விமானம் மூலம் இன்று(29) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்விமானப் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஹொங்கொங் நாட்டில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் நேற்றிரவு(28) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

Related posts

அரசின் Online சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதாவுல்லாஹ் , அலி சப்ரி ரஹீம்!

கனமழையால் வெள்ள அபாயம்

காஸா போரால்: ஏசுநாதர் அவதரித்த பெத்லகேம் (Bethlehem) நகரில் கிற்மஸ் கொண்டாட்டங்கள் இல்லை