சூடான செய்திகள் 1

ஓமல்பே சோபித்த தேரருக்கு மேடையில் வைத்து பதில் வழங்கிய ரிஸ்வி முப்தி (video)

(UTVNEWS | COLOMBO) – இஸ்லாம் மதம் மோசமான போதனைகள் எதனையும் முன்வைக்கவில்லை என ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைதி, சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். இவருக்கு முன்னதாக இம்மாநாட்டில் உரையாற்றிய ஓமல்பே சோபித்த தேரர், குர்ஆனில் வன்முறையைத் தூண்டும் விதமான போதனைகள் இருப்பதாகக் கூறியிருந்தார்.

அதற்கு பின்னர் உரையாற்றிய அவர், தேரர் தவறான புரிதலைக் கொண்டிருப்பதாகவும், குர்ஆன் தொடர்பில் அவர் பெற்றுக் கொண்ட விளக்கம் தவறான வகையில் அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். புனித குர்ஆனில் அவ்வாறான எந்த விடயங்களும் இல்லையென்றும், குர்ஆன் தொடர்பிலும், இஸ்லாம் தொடர்பில் காணப்படும் பிழையான அர்த்தப்படுத்தல்களைக் களைவதற்கு இதுபோன்ற பல மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், புனித குர்ஆன், இஸ்லாம் தொடர்பில் வழங்கப்படும் பிழையான அர்த்தப்படுத்தல்களைக் களைவதற்கு சகல முஸ்லிம்களும் தயாராக இருக்க வேண்டும். என கூறிப்பிட்டார்.

Related posts

இன்று 10.30க்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்…

வடக்கு ரயில் சேவையில் தாமதம்

இயந்திரத்தினை திருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் அதில் சிக்குண்டு பலி