கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகானை சுத்திகரிக்கும் வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான கே.பி.எஸ்.ஹமீடின் முன்னெடுப்பில் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மழைநீர் வழிந்தோட முடியாமல், குப்பை கூழங்கள் அடைபட்டுக் கிடந்த வடிகானை துப்பரவு செய்து அதுனுள் கிடந்த கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் வடிகான் அமைத்து சுமார் 10 வருடங்கள் தாண்டிய நிலையில் தற்போதுதான் முதன்முதலாக வடிகான் துப்பரவு செய்யப்படுகிறது என பிரதேச சபை உறுப்பினர் கே.பி.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
-எச்.எம்.எம்.பர்ஸான்