உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் கூட்டமாக வந்த காட்டு யானைகள்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட தியாவட்டவான் கொழும்பு பிரதான வீதி பகுதியில் இன்று சனிக்கிழமை (26) நள்ளிரவு வேளையில் கூட்டமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவியதால் பிரதேச மக்கள் பெரும் அச்சத்தை எதிர் கொண்டனர்.

காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் உள் நுழையாமல் விரட்டும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் மற்றும் கல்குடா அனர்த்த அவசர சேவைப் பிரிவினர், அகீல் எமெர்ஜன்ஸி பிரிவு இளைஞர்களின் ஒத்துழைப்புடன் யானைகள் காட்டுப் பகுதிக்குள் விரட்டப்பட்டன.

இந்த துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட அனைவருக்கும் பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

தனிமைப்படுத்தலில் இருந்து இதுவரை 8099 பேர் வீட்டிற்கு

இன்றும் மற்றுமொரு எரிவாயு கப்பல் நாட்டுக்கு

சோதனைகள் மேற்கொண்டு 14 நாட்களின் பின்னர் விடுவிக்கப்படும்