அரசியல்உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2 ஆவது அமர்வு (30) புதன்கிழமை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தலைமையில் இடம்பெற்றது.

தவிசாளரின் தலைமையுரையினைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களுக்கு சென்ற அமர்வின் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த, கூட்டறிக்கையில் சபை உறுப்பினர் கே.பி.எஸ்.ஹமீட் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் தேர்தல் கேட்டு வெற்றி பெற்றதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தவிசாளர் பதவியை ஏற்றுக் கொண்டமை தொடர்பில் பேசப்பட்ட விடயங்கள் கூட்டறிக்கையில் உள்வாங்கப்படவில்லை என கருத்து மோதல் இடம்பெற்றது.

இது தொடர்பில் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் சபை உறுப்பினர்களின் குருத்துக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் முதலாவது அமர்வில் தவிசாளர் பற்றி பேசிய விடயங்களை கூட்டறிக்கையில் கட்டாயம் உள்வாங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

அனைத்து விடயங்களும் கூட்டறிக்கையில் உள்வாங்கப்பட்டிருக்கும் நிலையில் குறித்த விடயம் மாத்திரம் சேர்த்துக் கொள்ளப்படாமையை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தங்களது அதிர்ப்தியை வெளிப்படுத்தினர்.

அதன்பின்னர், குழப்பத்துக்கு மத்தியில் குறித்த விடயங்களை கூட்டறிக்கையில் சேர்த்துக் கொள்வதென்று சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

அச்சுறுத்தல்களால் ரணிலின் வெற்றியை தடுக்க முடியாது – ஆஷு மாரசிங்க

editor

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது