கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் உள்ளூராட்சி வார அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களையும் மையமாகக் கொண்டு 2025 செப்டெம்பர் 15 – 21ஆந் திகதி வரை ‘மறுமலர்ச்சி நகரம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் உள்ளூராட்சி வாரம் அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (15) கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் கௌரவ தவிசாளர் எம்.எச்.எம்.பைரூஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கந்தசாமி பிரபு, விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் உமர் கத்தாப் அப்துல்லாஹ், சபையின் உப தவிசாளர் ஏ.எச்.நுபைர், பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு தவிசாளரின் தலைமையில் நடமாடும் சேவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
-எச்.எம்.எம்.பர்ஸான்