உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி, சூடுபத்தினசேனை சந்தியிலுள்ள கடைக்குள் புகுந்த வேன்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை சந்தியில் வேன் ஒன்று இன்று (9) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த வேன் ஒன்றே விபைத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சிறு கடை ஒன்றினுள் புகுந்துள்ளது.

வேனில் பயணித்தவர்கள் பாரிய சேதங்களின்றி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

5 மணிநேர வாக்குமூலம் – சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் சிவநேசத்துரை சந்திரகாந்தன்

editor

சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்

editor

“நடுத்தர வர்க்கம் வீழ்ச்சியடைந்து வருகிறது”