உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி – காவத்தமுனை சிறுவன் மரணம்

ஆட்டோ விபத்தில் சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாகவும் ஆட்டோவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று (18) சனிக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – காவத்தமுனை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

ஆட்டோவில் சிறுவன் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஆட்டோ சாரதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக உழவு இயந்திரத்தை கடந்து செல்லும் போது ஆட்டோவில் இருந்த சிறுவன் சிறிய உழவு இயந்திரத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் காவத்தமுனை பாடசாலை வீதியைச் சேர்ந்த றியாஸ் – மர்ழியா தம்பதிகளின் மகனான ஒன்பது வயதுடைய சஹ்ரான் என்பவரே மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த சிறுவனின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

இலங்கை சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்கு இந்தோனேசியா ஆதரவு

editor

பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயமா?