உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் லொரி குடைசாய்ந்து விபத்து!

சிறிய ரக லொரி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – நாவலடி பிரதான வீதி அந்நூர் அகடமி அருகில் வைத்து இன்று (28) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

கொழுப்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற லொரியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொரியின் டயர் வெடித்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உடனடியாக செயற்பட்ட பொதுமக்கள் லொரியை ஒழுங்கு படுத்தியுள்ளனர்.

இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்

கொழும்பில் கனமழை – வாகன நெரிசல்

editor

 07 பொருட்களின் விலை குறைப்பு