உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் தீப்பற்றி எரிந்த வீடு – சந்தேகத்தில் வீட்டு உரிமையாளர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தீப்பற்றிய வீட்டை ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தீப்பற்றிய வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.

இந்த தீ வைப்பு சம்பவத்தில் வீட்டு உரிமையாளரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

குறித்த இடத்துக்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார ஆகியோர் விஜயம் செய்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

கந்தகாடு : மற்றொரு ஆலோசகருக்கு கோரோனா; 70 சிறுவர்கள் தனிமைப்படுத்தலில்

நாடளாவிய ரீதியாக வனசீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

டீசல் தட்டுப்பாடு : ஸ்தம்பிக்கும் பேரூந்து, ரயில் சேவையில் சிக்கலில்லை