உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் கோர விபத்து – ஒருவர் பலி

மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டி விபத்தில் வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் (5) செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்த 86 வயதுடைய வயோதிபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதில், காயமடைந்த வயோதிபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

editor

உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது