உள்நாடுவணிகம்

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

(UTV | கொழும்பு) -எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடுமையான விதிமுறைகளின் கீழ் ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வரமுடியும் என சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் நிறுத்தப்பட்டது.

இதேவேளை, நாட்டிற்குள் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதி கோரி பம்பலப்பிட்டி பாடசாலைக்கு முன்னால் போராட்டம்

editor

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள நிவாரணங்கள்