விளையாட்டு

ஒலிம்பிக் குழுவின் துணை தலைவருக்கும் கொரோனா

(UTV|ஜப்பான் ) -ஜப்பானிய ஒலிம்பிக் குழுவின் துணை தலைவர் கோசோ தாஷிமா (Kozo Tashima) விற்கும் கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Kozo Tashima மார்ச் மாதத்தின் முதல் பகுதி வரையிலான காலப்பகுதியில் பிரித்தானியா, நெதர்லாந்து, மற்றும் ஐக்கிய அமரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்துள்ள நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு அவர் இலக்காகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஜப்பானிய ஒலிம்பிக் குழுமத்தின் துணைத்தலைவர் Kozo Tashima கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும் திட்டமிடப்பட்ட வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜோன் லெவிஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்

காலியில் புதிதாக இரண்டு கிரிக்கெட் மைதானம்-பிரதமர்

காயம் காரணமாக துஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத சூழ்நிலை.