விளையாட்டு

ஒலிம்பிக் இரத்தாகுமா?

(UTV |  ஜப்பான்) – ஜப்பானில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வேண்டுமென்று உலகம் முழுவதும் இருந்து குரல்கள் எழுந்துள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிக

ள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யவேண்டும் என எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இதற்கான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 3. 5 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஒலிம்பிக் நடக்க இருக்கும் ஜப்பானிலும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு எதிராகவே மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Related posts

62 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த பங்களாதேஷ்

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் திடீரென பயணம்

2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தாமதம்