உலகம்

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – ஆப்கானிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

ஆப்கானிஸ்தானில் இன்று (05) அதிகாலை 3.16 மணியளவில் ரிச்டர் 4.9 அளவிலும், காலை 7 மணியளவில் ரிச்டர் 5.2 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ரிச்டர் 4.6 அளவிலும், ரிச்டர் 4.5 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, நேற்று ரிச்டர் 4.1, 5.8, 4.5, 4.8 அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் ஆப்கானிஸ்தானில் 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாக வில்லை.

Related posts

பிரேசிலில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து – பத்து பேர் பலி – பலர் காயம்

editor

ஈரானிய அணு விஞ்ஞானி படுகொலை

விமான சேவைகளை அதிகரிப்பதற்கு கட்டார் விமான சேவை தீர்மானம்.