அரசியல்உள்நாடு

ஒரு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில் CIDயில் இருந்து வௌியேறினார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறிச் சென்றுள்ளார்.

சுமார் ஒரு மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று (11) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்.

நாட்டிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்திருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக, முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Related posts

ஐக்கிய அரபு இராச்சியம் செல்கிறார் ஜனாதிபதி அநுர

editor

உப்பின் விலை அதிகரிப்பு

editor

தேர்தல் தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்