சூடான செய்திகள் 1

ஒரு தொகை வௌிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-ஒரு தொகை வௌிநாட்டு தயாரிப்பு சிகரட்டுக்களை நாட்டுக்கு கடத்தி வந்த இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறியுள்ளார்.

சந்தேகநபர் இன்று அதிகாலை 12.55 மணியளவில் டுமான விமான சேவை விமானம் ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இதன்போது சந்தேகநபரின் பயணப் பொதி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சுமார் 1,650,000 ரூபா பெறுமதியுடைய 150 பெட்டிகளில் பொதி செய்யப்பட்ட 30,000 வௌிநாட்டு சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

 

 

Related posts

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு – ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விளக்கமறியலில்

நாளை தினத்திற்குள் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு