சூடான செய்திகள் 1

ஒரு தொகை வெடிப்பொருட்களுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) முன்பள்ளி பாடசா​லை கட்டடமொன்றின் அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஒரு தொகை வெடிப்பொருட்களுடன் கெக்கிராவ பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய, இருவர் இராணுவத்தினரால் நேற்று(25) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேநகபர் ஒருவர் இந்தக் கட்டடத்தின் பொறுப்பானவராகக் கடமையாற்றி வந்துள்ளதுடன், இந்தக் கட்டடத்திலிருந்து C 4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிப்பொருள் 168 கிலோகிராம், மாக்கர் பேனைக்குள் வைக்கப்பட்டிருந்த பச்சை, மஞ்சள் நிற வயர்கள், டெட்டனேட்டர், தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட பிரிவினைவாத மத புத்தகங்கள் 5 என்பன இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்படி சந்தேகநபர்கள் இன்று(26) நீதிமன்றில் ஆஜர்படுத்த கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

ஶ்ரீலங்கன் விமான சேவையின் 4 விமான சேவைகள் இரத்து

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தொடர்பான விசேட அறிவித்தல்

புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு நிகராக ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்டம் கொழும்பிற்கு….