உள்நாடு

ஒரு கிலோ சம்பா அரிசி 128 ரூபாவிற்கு

(UTV | கொழும்பு) – சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சம்பா அரிசி 128 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் புறக்கோட்டையில் அரிசி மொத்த விற்பனை நிலையங்களை கண்காணித்தார். இதன் போது அமைச்சர் வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். சம்பா அரிசி, நாட்டரிசி, பச்சையரிசி ஆகியவற்றை முறையே 100, 105, 115 ஆகிய விலைகளில் பெற்றுக் கொள்ள முடியும் என வியாபாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

விரைவில் இந்த அரிசி தொகையை சதொஸ விற்பனை நிலையங்களுக்கு வழங்கி, நுகர்வோர் ஒருவருக்கு 128 ரூபா என்ற அடிப்படையில், பத்து கிலோவை வழங்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஏனைய அரிசி வகைகளை 130 ரூபாவிற்கும் குறைந்த விலையில் வழங்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது

‘ஜசீரா’ விமான சேவை ஆரம்பம்

கட்டாரிலிருந்து 264 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்