உலகம்

ஒமிக்ரோன் வைரஸின் புதிய உருமாறிய வகை உருவாகும் – WHO

(UTV | ஜெனீவா) – உலகளவில் ஒமிக்ரோன் பரவலானது புதிய உருமாறிய வகையாக உருவாக வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒமிக்ரோன் புதிய உருமாறிய வகையானது, தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு பின்பு உலக நாடுகளில் பரவ தொடங்கியது. முழு அளவில் தடுப்பூசி செலுத்தியவர்களையும் இந்த ஒமிக்ரோன் விட்டு வைக்கவில்லை.எனினும், இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பெருந்தொற்று இத்துடன் முடிந்து விடாது. உலக அளவில் ஒமிக்ரோன் அதிக பரவலானது புதிய உருமாறிய வகை உருவாக வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் மிக தீவிரமுடன் பரவி வரும் ஒமிக்ரோன் தொற்றினால் சர்வதேச அளவில் கடந்த வாரத்தில் 20% அளவுக்கு புதிய பாதிப்புகள் அதிகரித்துள்ளன.மொத்தம் 1.9 கோடி பேருக்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

எனினும், கணக்கில் வராத புதிய பாதிப்புகளால் உண்மையான எண்ணிக்கை மிக அதிகம் இருக்க கூடும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

 

 

 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக வங்கி நிதியுதவி

மியன்மாரில் மேலும் நீடிக்கப்பட்ட அவசரநிலை!

தமிழகத்தில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை