அரசியல்உள்நாடு

ஒன்லைன் முறையில் அபராதம் செலுத்த அமைச்சரவை அனுமதி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

அரசாங்கம் அறிமுகப்படுத்திய முன்னோடித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் ஆசன பட்டி அணிய வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களிடம் உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

“இப்போது அபராதம் செலுத்துவது எளிதாக்கப்பட்டுள்ளது. இன்று அமைச்சரவை அனுமதி அளித்தது…

தற்போது, ​​குருநாகல் முதல் அனுராதபுரம் வரை மட்டுமே தொலைபேசி மூலம் அபராதம் செலுத்த முடியும்.

இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இப்போது தொலைபேசிகளை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு முதல், எங்கிருந்தும் அபராதம் செலுத்தலாம்.

ஆசன பட்டி அணிந்து அபராதம் செலுத்தாமல் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். கவனமாக சென்று வாருங்கள் என்பதே எமது கருப்பொருள்.” என்றார்.

Related posts

தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்

editor

டிப்ளோமா பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரியர் பதவி

நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி முதல் பயணக் கட்டுப்பாடு