உள்நாடுசூடான செய்திகள் 1

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் முடிவு

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவர தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (05) அழைக்கப்பட்ட போது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இதனை மன்றுக்கு அறிவித்தார்.

இந்த மனுக்களை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உட்பட சில தரப்பினர் தாக்கல் செய்துள்ளனர்.

Related posts

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு

editor

ரயில் சேவையில் தாமதம்

இ.போ.தொழிலாளர் சங்கம் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை