சிந்தனையுள்ள, கருணையுள்ள, நீதி மற்றும் நியாயத்தை உலகிற்குக் கற்பித்த மனிதாபிமான உணர்வுகளையும் மனித அன்பையும் உலக உயிரினங்களுக்காகப் பகிர்ந்தளித்த இறைதூதர் முஹம்மது நபிகளாரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது வாழ்த்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக முழு உலக மக்களுக்கும் அதேபோல் இலங்கையில் வாழும் இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கும் வாழ்த்துச் செய்தியை அனுப்ப முடிந்தமை மகிழ்ச்சிக்குரியதுன அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனம், மதம், குலம் அல்லது இருப்பு நிலை பார்க்காமல் ஒருவருக்கொருவர் மரியாதை, கருணை மற்றும் சேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும்போது மட்டுமே ஒரு சமுதாயம் செழிக்க முடியும் என்பதை நபிகள் நாயகம் நமக்குக் காட்டியுள்ளார்.
சமூக பிரச்சினைகளுக்கு சர்வதேசம் நிலைதன்மையான தீர்வுகளை தேடிக்கொண்டிருக்கிறது. நபிகளாரின் உன்னத போதனைகளில் முழு மானுடத்திற்கே வழிகாட்டல்கள் உட்பொதிந்துள்ளன.
அன்னாரின் போதனையானது ஒற்றுமை, பணிவு மற்றும் கருணையை பிரதிபலிக்கிறது, அது இன்றும் நமது பாதையை ஒளிரச் செய்கிறது என்பது என் நம்பிக்கை.
ஒரு நாடாக நாம் இப்போது பல சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். எதிர்காலத்தில் மேலும் சவால்கள் வரக்கூடும்.
ஆனால் ஒரே மக்களாக, ஒரே குடும்பமாக மற்றும் ஒரே நாடாக ஒன்றிணைவதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
இன மத குல வேறுபாடுகளைப் பார்க்காமல் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புள்ள சமுதாயத்தை கட்டியெழுப்ப அன்னார் காட்டிய வழிமுறைகளை நாமும் பின்பற்ற முடியும்.
அந்த வழிமுறைகளைப் பின்பற்றி இந்தக் கடினமான நேரத்தில் நாம் அனைவரும் நாட்டிற்காக ஒன்றாக அணிதிரளுவோம் என தமது வாழ்த்திச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.