உள்நாடு

ஐ.தே.க புதிய தலைமைத்துவம் – இன்று விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் இன்றைய தினம்(12) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக தீர்மானித்துள்ளமையை அடுத்து கட்சியின் தலைமைப் பதவிக்கு தயா கமகே, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கட்சிக்கான புதிய தலைமைத்துவத்தை நியமித்ததன் பின்னரே, தேசிய பட்டியல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாங்கள் காட்டி வருகிறோம் – பிரதமர் ஹரிணி

editor

ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்

editor

டொலரின் பெறுமதி வலுக்கிறது