உள்நாடு

ஐ.தே.க தலைமைப் பதவி – மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு

(UTV|கொழும்பு)- ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,  நவின் திசாநாயக்க, பாலித ரங்கே பண்டார மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்  பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கு  தீர்மானித்துள்ள நிலையில் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் நேற்றைய தினம்  தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பில் நேற்றைய தினம் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

இரணைதீவு : சுகாதார திணைக்களத்தினால் இதுவரை அனுமதி வழங்கவில்லை

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

editor