ஐ.தே.க. அரசியல் அணிதிரட்டல் பிரதி செயலாளர் நாயகமாக ஹரின் பெனாண்டோ இன்று (10) தன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய பிரதான பதவியொன்றை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்ததற்கு அமைவாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ இப்பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவற்றை ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுத்துவதோடு, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்கு பொறுப்பாக ஹரின் பெனாண்டோ செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
