உள்நாடு

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTV|கொழும்பு)- ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(14) காலை 9.30 அளவில் கட்சித்தலைமையகத்தில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்துக்காக இதுவரை எட்டு பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் , உப தலைவர் ரவீ கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க, பொருளாளர் தயா கமகே, ருவன் விஜேவர்த்தன, அர்ஜூன ரணதுங்க, பாலித்த ரங்கே பண்டார மற்றும் வஜிர அபேவர்த்தன ஆகியோரின் பெயர்களே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் இன்று(14) இடம்பெறவுள்ளது.

Related posts

இன்றிலிருந்து மழையுடனான வானிலையில் அதிகரிப்பு

ஒற்றுமையில்லையேல் எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் கிழக்கில் அதிகரிக்கும்

Z தமிழ் ‘ஸரிகமப’ சீசன் 5 இற்கு தெரிவான அம்பாறை மாவட்ட பாடகர் சபேசன்

editor