உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர் சம்மாந்துறை பொலிசாரினால் கைது!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 01 பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை 1.00 மணியளவில் சம்மாந்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரினால் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கையடக்க தொலைபேசியின் உட்பகுதியில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை புளக் ஜே 02 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும், கல்லரிச்சல் 03 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சந்தேக நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து 2 கிராம் 631 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், கையடக்க தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டதுடன், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 330 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டுதலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் தலைமையிலான குழுவினரினால் குறித்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

சஹ்ரான் விவகாரம் : நீண்ட நாட்களாக சிறையிலிருந்த ஆமி முயைதீனின் அழுகுரல்!

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்காக 500 மில்லியன் டொலர்கள்