உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருளுடன் 28 வயதுடைய இளைஞன் கைது

மாதம்பிட்டி, மிஹிஜய செவன பகுதியில் 01 கிலோ கிராமிற்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதம்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 1 கிலோ 310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் 28 வயதான கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மாதம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வவுனியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மதுபான சாலைகளுக்கு பூட்டு

கடவத்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி