உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருளுடன் முன்பள்ளி ஆசிரியையும் அவரது கணவரும் கைது

ஒரு கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மாதம்பிட்டி பொலிஸாரால் முன்பள்ளி ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதன் பெறுமதி பல மில்லியன் ரூபாகளாகும்.

மிஹிஜய செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு சந்தேக நபரைத் தேடுவதற்காக மாதம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு சென்றது.

சந்தேக நபர் அப்போது வீட்டில் இல்லை, அவரது 32 வயது மனைவி மட்டுமே அங்கு இருந்துள்ளார்.

அவர் மீது எழுந்த சந்தேகத்தின் பேரில், பெண் பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​அவரது மார்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர் தனது வேலையின் போது ஐஸ் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது கணவர் மற்றொரு ஐஸ் போதைப்பொருள் பொதியுடன் வீடு திரும்புவதாகக் கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, பொலிஸார் நடத்திய சோதனையில் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அவரை சோதனை செய்தபோது, ​​அவரது சூட்கேஸில் 1 கிலோ 310 மில்லிகிராம் ஐஸ் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் உள்ள ஒரு சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் சந்தேக நபருக்கு ஐஸ் வழங்கப்பட்டு வருவதாக பவலிஸார் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் அவரை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்,

மேலும் கைது செய்யப்பட்ட அவரது மனைவியான ஆசிரியை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு

2026 ஆம் ஆண்டுக்கான கொட்டகலை பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

editor

அரச சேவையின் முன்மாதிரியான நிறுவனமாக மாறி பொறுப்புகளைமுறையாக நிறைவேற்றுவோம் – ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க

editor