உள்நாடு

ஐஸ் போதைப்பொருளுடன் டுபாய் சுத்தாவின் உதவியாளர் கைது

டுபாய் சுத்தா என்ற பிரசாத் சதுரங்க கோதாகொடவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் பாணந்துறை குற்ற விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 4,665 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர், டுபாய் சுத்தாவால் வட்ஸ்அப் ஊடாக ஈஸி கேஷ் முறையில் இயக்கப்படும் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

Related posts

கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் – முன்னாள் எம்.பி சுமந்திரன்

editor

ரிஷாட்டின் கோரிக்கைக்கு ஜனாதிபதி தலைசாய்வு [VIDEO]

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்காக ஏழுபேர் களத்தில்!