உலகம்

ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து சிதறியது

ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக்கின் தென்மேற்கே உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் நேற்றுமுன்தினம் எரிமலை வெடித்து சிதறியது.

எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்பு சுமார் 700 முதல் 1000 மீட்டர் அகலமுள்ள பிளவு வழியாக தென்கிழக்கு நோக்கி பாய்ந்து வருகிறது.

தீவிர நில அதிர்வுகள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களும் சுற்றுலா பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்.

-ரொய்ட்டர்

Related posts

உலக சுகாதார நிறுவனத்தினால் அவசர நிலை

பிலிப்பைன்ஸ் இராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு

‘ஈரான் பயணம் உலக அரங்கில் புதின் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை காட்டுகிறது’