வகைப்படுத்தப்படாத

ஐரோப்பிய பாராளுமன்ற குழு நாளை இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உயர் மட்ட உறுப்பினர்கள் குழுவொன்று நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.

அந்தக் குழுவினர் எதிர்வரும் 6 ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அது சம்பந்தமாக காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்து தேடிப்பார்க்க இந்த குழு இலங்கை வருகிறது.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வர்த்தகர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்டவர்களை கொழும்பில் வைத்து அந்தக் குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்​க ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகம் நம்பந்தமான குழு தீர்மானித்திருந்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சவூதி அரேபியாவில் பெண்களுக்கான முதல் கார் ஷோரூம் திறப்பு

Sri Lanka all set for Expo 2020 Dubai

சிரியாவில் ரஷியா நடத்திய குண்டு வீச்சில் 30 தீவிரவாதிகள் பலி