அரசியல்உள்நாடு

ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை சந்தித்தார் சஜித் பிரேமதாச

போட்டி விதிமுறைகளுக்கு இணங்குதல், தற்போதைய அரசாங்கம் SVAT முறையை இடைநிறுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மையாளர்கள் (MSMEs) எதிர்கொள்ளும் பல சவால்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மேதகு கார்மென் மொரேனோ அவர்களை இன்று (08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து விசேட கலந்துரையாடினார்.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவிற்கு மொரேனோ அவர்கள் தலைமை தாங்கியதோடு, இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியக் தூதுக்குழுவின் முதல் ஆலோசகர் கலாநிதி ஜோஹான் எச். ஹெஸ்ஸும் இதில் பங்கேற்றார்.

இங்கு பிரத்தியேக சிநேகபூர்வ கலந்துரையாடலுக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரேனோ மற்றும் கலாநிதி ஹெஸ்ஸுடன் இணைந்து, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மை துறையைச் சேர்ந்த வணிக முயற்சித் தலைவர்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டார்.

இதன் ஊடாக, உள்நாட்டு தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் சவால்களை ஐரோப்பிய ஒன்றிய தூதுரிடம் நேரடியாக முன்வைக்க இது ஓர் அரிய வாய்ப்பாக அமைந்தது காணப்பட்டது.

தொழில் வியாபார முயற்சியாண்மை நடவடிக்கைகளுக்கு சமமான சூழலை உருவாக்குதல், கொள்கை ரீதியிலான இணக்கத்தை உறுதி செய்தல், இலங்கையின் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபுணத்துவ ஒத்துழைப்பு மற்றும் போட்டித்தன்மையை ஆதரிப்பதற்கான வழிகளை ஆராய்வது என்பன தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த கலந்துரையாடல் முதன்மையாக கவனம் செலுத்தியது.

Related posts

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சரண குணவர்தன விடுதலை

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

editor

பிரதமரை மிஞ்சி தொழிநுட்ப குழுவின் முடிவே இறுதியானது