உள்நாடு

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுடன்(26) நிறைவு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த இந்த விடயம் தொடர்பில் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார மறு சீரமைப்பு, வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை, 5000 ரூபா கொடுப்பனவை வழங்காத மாவட்டங்களில் தொடர்ந்தும் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

74 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார மறு சீரமைப்பு, வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.

Related posts

இளைஞர்கள் 11 பேர் கடத்தல் விவகாரம் – வழக்கு ஒத்திவைப்பு

இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும்

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

editor