விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியன்

(UDHAYAM, COLOMBO) – ஆறாவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியனாகியுள்ளது.

இந்த அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ள மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இலங்கை வீரர் லசித் மாலிங்க விளையாடினார். மஹேல ஜயவர்த்தன இந்த அணியின் பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/Mhela.jpg”]

றைசிங் பூனே சுப்பர் ஜயன்ட் அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை அணி ஒரு ஓட்டத்தால் வெற்றிபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சுப்பர் ஜயன்ட் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

Related posts

இலங்கை அணி 126 ஓட்டங்களுக்கு சுருண்டது

T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை

4 ஆயிரம் ரன்களை கடந்து கிறிஸ் கெய்ல் சாதனை