உலகம்

ஐந்து மாடிக்கட்டடம் பஸ் மீது விழுந்ததில் அதிகரிக்கும் உயிர் பலிகள்

(UTV |  தென் கொரியா) – தென் கொரியாவில் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று பஸ் ஒன்றின் மீது வீழ்ந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு க்வாங்ஜூ (Gwangju) நகரில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

17 பேரை ஏற்றிய பஸ், கட்டடம் அமைந்திருந்த சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததாக அந்நாட்டின் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டடம் இடிந்து வீழ்ந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

குறித்த கட்டடம் இடிந்து வீழ்வதற்கு முன்னதாக அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து பணியாளர்களும் வௌியேற்றப்பட்டுள்ளனர்.

Related posts

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – ஆப்கானிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

editor

இளவரசர் பிலிப் காலமானார்

சித்தரவதை முகாமாக இருக்கும் குவான்தனாமோ சிறை