உள்நாடு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா ? (வீடியோ)

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை கடந்த 15ஆம் திகதி நடைபெற்றது.

வினாத்தாள் கசிந்ததுள்ளதாக தகவல் வௌியானதை அடுத்து பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை நடத்தியது.

அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையுடன் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்படி, விசாரணை முடிவுகளின்படி செயற்படுமாறு ஜனாதிபதியும் அமைச்சரும் ஆலோசனை வழங்கினர்” என்றார்.

Related posts

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா

editor

ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் கைது

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ADIC இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

editor